Wednesday 20 February 2013

தமிழும் தமிழகமும்

















தீராத் தீஞ்சுவையுடன்
பைந்தமிழ் பக்கமிருக்க
விடை விளங்கா 
வின் முகிலாகி
எதனை விளைகிறாய்
தமிழா நீ ?

ஆன்றோரும் சான்றோரும்
அள்ளிப் பருகிய
அருமைத் தமிழ்
இன்று,
பார்வைப் பொருளாய்
பதிக்கப் பட்டுள்ளது
புத்தகங்களில்

அண்டம் வென்று
ஆகாயம் சென்று
வான் புகழ்
கொண்ட தமிழ் 
ஏனோ  இன்று
வாயினின்று கூட
வர மறுக்கின்றது

அன்னைத் தமிழ் அவளை
அனாதையாக்கி
அலையவிடின்
பிள்ளைகள் நமக்கும்
பிணி வந்து சேராதா
அன்பர்களே?

உடமை,உரிமை,உணர்வுகளை
பணயமாக்கினோம்
பணத்திற்காக,
அதன் வரிசையில்
மொழி இழந்த
ஊமையுமாகி
உயிர் சுமந்தென்ன பயன் ?
தமிழினி மெல்லச் சாகுமென
காயப் பட்டுக் கதறிய
கவிஞனின்
காயங்களைக் களையாவிடினும்
காயங்களின் காரணங்களைக்
களைந்திடுவோம்

தமிழையும், தமிழகத்தையும்
உள்ளங் கைகளின்
ரேகைகளாக்கி
உடன் கொண்டு செல்வோம்
உயிர் பிரிந்த போதும்  !


                                                    -கண்ணம்மா

6 comments:

  1. varthai ovovundrum arumaiyaaga ulladhu,

    aanaal naanum karuthukkalai thanglishil dhaan ezhudhugiren

    ReplyDelete
  2. காயங்களின் காரணங்களை கலைந்தாலே காயமும் ஆறிவிடும்....

    ReplyDelete
  3. அருமையான வரிகள்

    ReplyDelete
  4. மெல்ல சாகும் என்ற கூற்றை பொய்யாக்குவோம் கண்ணம்மா.... நல்ல வரியமைப்பு.... வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. அண்டம் வென்று
    ஆகாயம் சென்று
    வான் புகழ்
    கொண்ட தமிழ்
    ஏனோ இன்று
    வாயினின்று கூட
    வர மறுக்கின்றது

    Vaayilla jeevan pola...Arumai Arumai

    ReplyDelete