Tuesday, 19 March 2013

பேசிவிடு...!



















"மௌனம்".
உனக்கு "தற்காப்பு".
எனக்கு "தண்டனை".
பேசிவிடு...!


மொழிபெயர்த்து மட்டுமல்ல,
முகம் பார்த்தும் கூட
புரியவில்லை
உன் மௌனம்.
பேசிவிடு..!


மௌனம் போதும்,
மோதிப்பார்த்து விடலாம்
மொழிகளால்
பேசிவிடு ...!


எங்கு கற்றுக்கொண்டாய் இந்த பாஷையை
மற்றவர்க்கு "இதமாய்."
எனக்கு மட்டும் "ரணமாய்."
பேசிவிடு...!


அப்பப்பா...
எத்தனை சொற்கள்
உன் மௌனத்திலும் கூட.
அதை வரிசை படுத்தவேணும்
பேசிவிடு...!


மௌனம் அழகு தான்.
ஆனாலும்
நீ கொடுமைக்கார அழகி.
பேசிவிடு...!


நீ மௌன போர்க்களம்
புகந்த பொக்கிஷம்.
நான்
போர்தொடுக்கவா..?
பிரமிக்கவா ..?
பேசிவிடு...!



என்னை சத்தமில்லாமல்
உடைத்தெறிந்த
ஊமை நீ
ஊனமாய் நான்.
                                                                               --Yuvaraj

3 comments:

  1. Nanbare, Miga miga arumayaana padaippu kurippaka keel sonna varikal....

    என்னை சத்தமில்லாமல்
    உடைத்தெறிந்த
    ஊமை நீ
    ஊனமாய் நான்.

    ReplyDelete
  2. நான் வாசித்த சிறந்த கவிதைகளில் இதற்கு ஒரு இடம் உண்டு. மிக அற்புதம், அதிசியம்.......

    ReplyDelete
  3. மிக அருமையான கவிதை... வாழ்த்துக்கள் யுவராஜ்....

    ReplyDelete