பெண்ணாகப் பொறந்ததால
பாவம் வந்து தொத்திகிச்சு
மண்ணுக்குள்ள போறமட்டும்
நிழலு மட்டும் தொணவந்துச்சு
ஏட்டுலதா உள்ளப்பங்கும்,
எட்டிவந்து சேந்திடாதோ
பாரத நாட்டினில
பொம்பளைக்கும்,
பாதுகாப்பும் பொறந்திடாதோ!
கண்ணுக்குள்ள காதலுண்டு
நெஞ்சுக்குள்ள ஆசையுண்டு
மண்ணுக்கூட மன்றாடி
கசிந்துருகும் மேகம்போல
மனசோட மன்றாடி
ஆசையெல்லாம் கரைஞ்சதடி
நீங்காத பாரமெல்லாம்
நெஞ்சத்த நெறச்சிருக்கும்
உதடு மட்டும் ஏனோ
ஓயாம சிரிச்சி கிடக்கும்
வஞ்சிக்கும் வஞ்சினு
உலகந்தா பேசுதடி
ஆறாத சொல்லால
அப்பப்ப ஏசுதடி
ஏசல்கள ஏணியாக்கி
இன்னலெல்லாம் தாண்டிவந்து
நாநடக்கும் பாதையுந்தா
நாளெல்லாம் நகருதடி
நல்லதொன்னு நடக்குமுன்னு
நாளெல்லாம் காத்திருந்தே
வீசிஎறிஞ்ச பந்தாகி
விழுந்த பின்னும்
எழுந்து வந்தேந்
பாசத்தப் பொழிஞ்சாலும்
பகய மறந்து பேசினாலும்
உள்ளத்த ஒளிச்சாலும்
ஊமையாகிச் சிரிச்சாலும்
மனுஷனின்னும் பொறக்கலையே ..!
- கண்ணம்மா
மண்ணுக்கூட மன்றாடி
ReplyDeleteகசிந்துருகும் மேகம்போல
மனசோட மன்றாடி
ஆசையெல்லாம் கரைஞ்சதடி
Semma line kannamma....
நல்ல வரிகள் கண்ணம்மா....
ReplyDeleteபாசத்தப் பொழிஞ்சாலும்
ReplyDeleteபகய மறந்து பேசினாலும்
உள்ளத்த ஒளிச்சாலும்
ஊமையாகிச் சிரிச்சாலும்
ஏம்மனசப் புரிஞ்சுக்கத்தா
மனுஷனின்னும் பொறக்கலையே ..!
arumai kannamma