Saturday 16 March 2013

காதல் செய்கின்றேன்






















காதல் செய்கின்றேன்
உனை நான் காதல் செய்கின்றேன்
என் இரவுகளிலும்
என் கனவுகளிலும்
உறக்கம் கொய்கின்றேன்,
அதில்,
உன் உருவத் தேடல் செய்கின்றேன்

நோவு கொள்கின்றேன் 
நான் நோவு கொள்கின்றேன் 
உன் நினைவுகளால் 
அவை தரும் நிகழ்வுகளால் 
நித்தம் நித்தம்  
நீங்கா நோவு கொள்கின்றேன்

தீ வளர்க்கின்றேன்
அணையாத் தீ வளர்க்கின்றேன்
உன் கரம் பற்றும்
கனம் காண
நெஞ்செல்லாம் நாள்தோறும்
தீராத் தீ வளர்க்கின்றேன்

ஏக்கம் கொள்கின்றேன்
நான் ஏக்கம் கொள்கின்றேன்
உன் ஒரு நொடிப் பார்வைக்காகவும்
மறு நொடிப் புன்னகைக்காகவும்
நொடிக்குநொடி ஏக்கம் கொள்கின்றேன்

உருகிக் கரைகின்றேன்
நான் உருகிக் கரைகின்றேன்
உன் கண்கள்
சொல்லும் காதலிலும்
உதடுகள் உரைக்கும்
ஒரு வரிக் கவிதைகளிலும்
நான் உருகிக் கரைகின்றேன்


மீள மறுக்கின்றேன்
நான் அசை போட்டு அலைகின்றேன்
நெஞ்சிற் பதிந்த
நல் நினைவுகளையும்
களம் கடந்த
நம் உறவுகளையும்
நான் அசைபோட்டு அலைகின்றேன்

காதல் செய்கின்றேன்
நான் காதல் செய்கின்றேன்
என்
 கண்மணியாய் உன்னை ஆக்கி
உன்
கண்ணிமையாய் நான் மாறி
கண் சிமிட்டும் கனமெல்லாம்
உன்னை நான்
காதல் செய்கின்றேன்


                                                                                        -கண்ணம்மா

10 comments:

  1. வித்தியாசமான வரிகள் கண்ணம்மா.... அருமை
    நோவு கொள்கின்றேன்
    நான் நோவு கொள்கின்றேன்
    உன் நினைவுகளால்
    அவை தரும் நிகழ்வுகளால்
    நித்தம் நித்தம்
    நீங்கா நோவு கொள்கின்றேன்

    ReplyDelete
  2. கண்ணம்மா கிறங்க செய்கிறது உங்கள் கவிதை. யாருங்க அது, சீக்கிரம் எங்களுக்கு சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. iruntha pera pote eluthirukka matana deepan ,?
      rasithatharkku nandrigal ..

      Delete
  3. உறக்கம் கொய்கின்றேன்
    அதில்
    உன் உருவத் தேடல் செய்கின்றேன்...

    இப்படி நீங்கள் கொய்கின்ற ஒவ்வொரு வார்த்தையும்
    அத்தனை அழகு...

    ReplyDelete
  4. சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணம்மா அவ்ளோ அழகு..

    ReplyDelete
  5. Armai Arumai Arumai.........

    ReplyDelete