இந்த வார கலாச்சார கேள்வி இதோ!
மகள்: அம்மா!
இந்திரா விழா என்றால் என்ன? அப்படி ஒரு விழாவை நாம் இப்போதெல்லாம் கொண்டாடுவதே இல்லையே!
ஏன்?
அம்மா: அருமை! ஆம் கண்ணே. என் தாயைப் போல் நான் பூஜைகளில் ஈடுபடுவதில்லை. என்னைப் போல் நீயும் ஈடுபடுவதில்லை. ஒவ்வொரு தலைமுறையிலும் இப்படி பண்டைத் திருவிழாக்கள் மறக்கப்பட்டு தான் வருகின்றன. கடவுளர்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்றாலும் காலம் கடவுளர்களை விட சக்தி வாய்ந்ததாகவே இருக்கிறது. இதற்கு ஒரு சிறு கதை உள்ளது .
பண்டொரு காலத்தில் மிகச் செல்வாக்குடன் திகழ்ந்தக் கடவுளர்கள் பின்னாட்களில் மெல்ல தங்கள் செல்வாக்கை இழக்கத் தொடங்கினார்கள். தேவன் இந்திரன் அப்பேர்ப்பட்டதொரு கடவுள் கோட்பாடே.
கி.மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி. பி ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான சங்கக் காலத்தில் தமிழர்களுக்கு இந்திரனே செல்வாக்குள்ள கடவுளாகத் திகழ்ந்தார்.
அப்போதைய தமிழகச் சமவெளி மருதம் என்று வழங்கப்பட்டது. விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டிருந்த மக்களின் வாழ்வு வானிலிருந்து வீழும் வருணனை நம்பியே இருந்தது. எனவே அவர்கள் இந்திரனை மழைக் கடவுளாகக் கருதி வளமான வாழ்க்கைக்காகவும், திரளான செல்வத்துக்காகவும் அவனைத் தொழுது கொண்டாடினார்கள்.
ஆலயங்களில் கடவுள் வழிபாடு மட்டுமின்றி பல திருவிழகளும் கடவுளை மையமாக வைத்துக் கொண்டாடப்பட்டன. தமிழர்கள் இந்திரனை மையமாக வைத்து விழா எடுப்பதிலும், குதூகலத்துடன் கொண்டாடுவதிலும் பெருமை கொண்டார்கள் .
சோழர்களின் துறைமுகப்பட்டினமான காவிரி பூம்பட்டினத்தில் இந்திர விழா என்னும்
கோலாகலமான திருவிழா ஒன்றினை அந்நாட்களில் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
இந்திர விழா எவ்வாறு எல்லாம் கொண்டாடப்பட்டது என்பதற்கான விவரங்கள், தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காணப்படுகின்றன.
ஒருமுறை காவிரி பூம்பட்டினம் பசியிலும் பஞ்சத்திலும் வாடிய போது அப்போது அங்கு வர நேர்ந்த அகத்திய முனிவர்
அப்போதைய சோழ அரசன் செம்பியனிடம் மழைக் கடவுளான
இந்திரனுக்கு விழா எடுத்தால்
அவன் மனம் மகிழ்ந்து தனது வாழ்த்துக்களை மண்ணுலகின் மீது மழையாகப் பொழிவான் என அறிவுறுத்தினார் என்று மணிமேகலையில் காணப் படுகிறது.
முனிவரின் சொற்படி மன்னனும் மக்களும் ஒன்று திரண்டு இந்திரனுக்கு விழா கொண்டாடினர்.
வியப்பு அளிக்கும் விதமாக விழா முடிந்ததும் மழை பொழிந்து வெள்ளமாக திரண்டு மண்ணை நனைத்தது. பஞ்சம் பறந்தது. மக்கள் துயரம் தொலைந்தது.
திருவிழாவின் முடிவில் மழை பொழிந்ததால் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசர்களும் ஒவ்வோர் ஆண்டும் இந்திர விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர்.
சித்திரை பௌர்ணமி தினத்தன்று தொடங்கி வைகாசி பௌர்ணமி வரையிலான இருபதெட்டு தினங்களுக்கு இந்திர விழா கொண்டாடப்பட்டது. விழா தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் முரசுகள் அறையப்பட்டன.
மக்கள் இல்லங்களையும் சுற்றுப்புறங்களையும் பொது இடங்களையும் நீர் விட்டு கழிவிக் கோலமிட்டு தோரணங்களைத் தொங்கவிட்டு அலங்கரித்தனர்.
அரசு அதிகாரிகள் மன்னனுக்கு மரியாதைகளையும் காணிக்கைகளையும் செலுத்தி ஆட்சியும் மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினர்.
ஆலயங்களில் கடவுளர்களுக்கு வெடிகள் வெடிக்கப்பட்டு காணிக்கைகள் செலுத்தப்பட்டன. பாட்டுக்கச்சேரியும் நடனக்கச்சேரியும்
ஆங்காங்கே அரங்கேற்றப்பட்டன .
இந்திரவிழாக் கொண்டாட்டத்தின் இறுதி நாளன்று மக்கள் கடலில் நீராடி இந்திரனை வழிபட்டனர். இந்திர விழா கொண்டாடும் மக்களின் துயரங்களை எல்லாம் இந்திரன் களைந்து விடுவான் என்பது அப்போதைய நம்பிக்கையாக இருந்தது.
காவிரி பூம்பட்டினத்தைக் கடல் கொண்டு மக்களின் உடமைகளையும் உயிர்களையும்
கவர்ந்த காரணத்தால் இந்திரிவிழாக் கொண்டாட்டம் திடீர் முடிவுக்கு வந்ததாக வரலாறு பதித்து வைத்து இருக்கிறது.
இன்றைக்கு இந்திரனும் இந்திர விழாவும் முன்போல் கொண்டாடப்படவில்லை என்றாலும் அந்தக் கலாச்சார மிச்சம் மக்கள் மனதில் ஆழப் பதிந்த காரணத்தினால்தான் இன்றைக்கும் ஆலயங்களில் வெவ்வேறு பெயர்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
மகள், அருமையான கதை.
அருமையான தகவல்.. நன்றி....
ReplyDeletesuper information
ReplyDeleteKalachara Kelvigal paguthila neenga solrathu ellame theriyatha, nalla vishayama iruku. Vazhthukkal Geetha :)
ReplyDelete