Saturday 6 July 2013

வரலாறு முக்கியம் அமைச்சரே - 7


                இதுவரை  நாம்  புரட்டிய வரலாற்றுப் பக்கங்கள் சற்று மெத்தனமாகவே சென்றன அல்லவா

வரலாறு என்றாலே அரசன், வீரம், போர் முதலியனவற்றைப் பற்றி படிக்கவே நமக்கு சுவாரசியமாக 

இருக்கும்.இதோ இந்த பகுதி முதல் நம் வரலாற்றுப் பக்கங்கள் மெத்தனத்தை விட்டு விறு விறுப்புடன் 

செல்லும்.

இந்த பகுதியில் ஆறாவது நூற்றாண்டு துவங்குகிறது. இதில் தான் மக்கள் மனதில் சுயநல விதை முளைத்ததோ என்னவோ! அது முதல் ஒன்றாய்க் கூடி குலாவிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது புது புது காரணங்களால் பிரியத் தொடங்கினர்.

ஆறாவது நூற்றாண்டில் "இரும்பின்" உபயோகம் சில மேற்கு பகுதிகளில் ( கிழக்கு உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு பீகார்) பிரபலமாகியது. இப்படி இரும்பை உபயோகிக்கத் தொடங்கியவர்கள், புது புது விவசாயக் கருவிகளை உருவாக்கி விளைச்சலை அதிகரித்து சற்றே கர்வத்துடன் திரிந்தாரகள். தன் உபயோகத்திற்கு போக மீதமுள்ளவை அரசனுக்கு வரியாய்ச் சென்றன. இந்த செழித்த நிலை மக்களிடையே பிளவை உண்டாக்கியது. நிலங்கள் பகுக்கப்பட்டு அந்த நிலத்திற்கு உரியவர்கள் ஒன்று கூடி அதற்கு பெயரிட்டு சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். இப்படி பகுக்கப்பட்ட நிலங்கள் "ஜனபதாக்கள்" (தற்போதய மாவட்டங்களுக்கு நிகரானவை) என்று அழைக்கப்பட்டன.

சிறு சிறு ஜனபதாக்கள் இணைந்து "மகாஜனபதாக்கள்" (இப்போதய மா நிலங்களுக்கு  நிகர்) ஆயின. இப்படியாய் இமயம் முதல் நர்மதை வரை உள்ள நிலப்பகுதி பதினாறு ஜனபதாக்களாக பிரிந்திருந்தது.

இவை அனைத்தும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒன்றை ஒன்று  எதிரிகளாகவே பார்த்தன. ஒரு சில நேரங்களில் இரண்டிற்கு மேற்பட்ட ஜனபதாக்கள் கைக் கோர்த்துக் கொண்டு மற்றவற்றை எதிர்த்தன. இப்படியாய் சிறு சிறு போர்களுக்கும் ஆட்சி மாற்றங்களுக்கும்  துவக்க விழா நடந்தேறியது இந்த ஆறாம் நூற்றாண்டில் தான்.

ஒரு வழியாக இந்த சிறு சிறு விறுசல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு பெரும் சக்தி மௌரியர்கள்.  

இவர்கள் நிறைந்திருந்த மகதா பகுதி அனைத்து மகாஜனபதாக்களையும் தனக்குள் ஒருங்கிணைத்து 

அவற்றை மௌரிய சாம்ராஜ்யம் என்றப் பெயரில் ஆட்சிப் புரிந்து வந்தது.

மகதா சாம்ரஜ்யம்:
காலம் : 6 BC - 4 BC
மகதாவை ஆண்ட வம்சங்கள்:
* ஹரியன்யாகா----->  * பிம்பிசாரா
                                               * ஆஜாத் சத்ரு
                  * உதயின்
* சிசுனாகா
* நந்தா


நந்தா வம்சம்:
க்ஷத்ரியர்கள் அல்லாத முதல் வம்சம் இது தான். இதனைத் துவக்கியவர் மகா பதம நந்தா. அவர் கலிங்காவையும் சேர்த்து அனைத்து இடங்களையும் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தார். அடுத்ததாக வந்த தன நந்தா காலத்தில் தான் உலகப் புகழ் வாய்ந்த "அலெக்சான்டர்" இந்தியாவைத் தாக்கினார். இவர்களுடைய இந்த வமசம் செழிப்பாகவே  இருந்தது. இவர்கள் 2,00,000 காலாட்படை,  60,000 குதிரைப் படை மற்றும் 6000 போர் யானைகளை நிறுவினர். இத்தகைய பலம் வாய்ந்தப் படையே அலெக்சான்டரின் முன்னேற்றத்தைத் தடுத்திருக்க வேண்டும்.

மகதாவின் வெற்றிக்கான காரணங்கள்:
* அளவில் மிகவும் பெரியது. மேலும் மிகுந்த செல்வங்கள் கொண்டது.
* இயற்கையும் இதன் வெற்றிக்கு கையெழுத்திட்டிருக்கிறது. இரும்பு வளம் கொழிக்கும் நிலப்பரப்பு இதன் வசம்.
* மகதாவின் இரண்டு தலை நகரங்களான ராஜ்கிர் மற்றும் பாடலிபுத்ரா முக்கிய பகுதியில் அமைந்திருந்தது.
* வளம் பொறுந்திய மண். கங்கை இருப்பதால்!
* யானைகளின் இருப்பு!

அலெக்சான்டரின் தாக்குதல்:
பிலிப் என்ற மெக்கடோனிய (கிரேக்கம்) மன்னரின்  மகன் தான் அலெக்சான்டர். அவர் இந்தியா மீது 326 BC இல் தாக்குதல் நடத்தினார். அப்போது வட மேற்கு இந்தியாவானது பல சிறு சிறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டு ஆளப்பட்டு வந்தது. உதாரணத்திற்கு டாக்சிலா, பஞ்சாப் (போரஸின் அரசாட்சி), கந்தாரா, போன்றவை. இவைகளுள் போரஸ்- தவிர மற்ற சிற்றரசர்கள் எல்லாம் அலெக்சான்டருக்குத் தலை வணங்கினர். அலெக்சான்டருக்கும் போரஸ்-கும் ஜீலம் நதிக்கரையில் அமைந்த ஹைடாஸ்பஸ் பகுதியில் போர் நிர்ணயிக்கப்பட்டது. பியாஸ் நதி வரை வந்த அலெக்சான்டரின் படை அதன் பின் ஒரு அடி எடுத்து வைக்கவும் மறுத்தது. எனவே அலெக்சான்டர் பின் வாங்கினார். அவர் அதுவரை முன்னேறி வந்ததற்கு அறிகுறியாய் 12 பலி பீடங்கள் எழுப்பப்பட்டன (பியாஸின் மேற்கு பகுதியில்). அதன் பின் அலெக்சான்டர் 19 மாதங்கள் இந்தியாவில் இருந்து, பின் 323 BC இல் பாபிலோனில் இயற்கை எய்தினார்.

அலெக்சான்டரின் தாக்குதலின் தாக்கம்:
அலெக்சான்டரின் தாக்குதல் இந்தியாவில் எண்ணற்ற கலாச்சார மற்றும் அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்தது.
முதலில் இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் நான்கு தொடர்பு வழிகள் நிறுவப்பட்டன - 3 நில வழி; 1 கடல் வழி. இந்த தொடர்புகள் இந்த இரு நாடுகளுக்கிடையே கலாச்சார பரிமாறலுக்கு வழி வகுத்தன.
இதனால் நவநாகரிக கலைக் கல்லூரி ஒன்று கந்தாராவில் தொடங்கப்பட்டது. இதுவே வட இந்தியா அனைத்தையும் சந்திர குப்த மௌரியரின் கீழ்க் கொண்டுவர துணையாய் நின்றது.
மகதாவிலிருந்து பிறந்த மௌரியர்களின் பிரம்மாண்டமான சில பக்கங்கள் அடுத்த பகுதியில்.



No comments:

Post a Comment