வெகு நாட்களுக்கு
பிறகு சந்திக்கப் போகிறோம் நாம்.
நிகழ் காலத்தில்
பின் சென்ற இறந்த காலத்தை
எண்ணிக்கொண்டே
முன் சென்றது எனது பயணம்.
இதோ எட்டிவிட்டேன்
நீ இருக்கின்ற இடத்தை.
விழித்திரையில்
நீரோட்டம்,
உள் மனதில் போராட்டம்.
காலடி அதிர்ந்தது.
நீ,
களையிழந்த கண்களோடு
காத்திருந்ததை கண்ட
நான்,
செயலிழந்துப் போனேன்
செய்வதறியாது.
சுற்றமறிந்து சற்று
அமைதியானேன்.
சேர்ந்தமர்ந்து
கைக்கோர்க்கவில்லை,
தோள் சாய்ந்து
புதையவில்லை,
விழி மோதி பறக்கவில்லை,
விதி நினைத்து
புலம்பவில்லை.
போனவற்றை மறந்துவிட்டு,
வருவதை துறந்துவிட்டு,
இப்போது காற்றில்
மிதக்கிறேன் உன்னோடு……!
காதலோடு……!
காலதாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும் நண்பா, அருமை
ReplyDelete