உன்னைக் கண்ட நொடிப் பொழுதினில்
உருண்டோட ஆரம்பித்தது
எனது மாறுதல் சக்கரம்
என்னவென்று உரைப்பேன்
எனக்கான மாற்றங்களை ..!
இரவுகளைப் பகலாக்கினேன்
பகல்ப் பொழுதினில்
உன் நினைவை ஊற்றினேன்
நீல வானின் மேகங்களாய்
உன் நினைவுகள்
உள்ளங்கையின் ரேகைகளாய்
உன் உறவுகள்
கடிகாரச் சத்தத்திலோ
சட்டென்று உன் இதயத்தினோசை
காதோரத்தில் வீசிடும் காற்றதுவோ
உன் காதலையே கீச்சிடுகின்றது
வாசமில்லா மூங்கிலாய்
புதைக்கப்பட்ட உணர்ச்சிகளோ
உன் எதிரில் மட்டும்
ஒரு தலை உரையாடல் செய்கின்றன
கூரிய பார்வை கொண்ட
எனது கண்கள் ஏனோ
உன் கண்களைக் கண்ட வேளைகளில்
உருட்டிவிட்ட சோழியாய்
உருண்டோடிய படியே இருக்கின்றன
நீயும்,உன் காதலும்
உடனிருப்பதால் தானோ என்னவோ
தனிமையினை உணர்ந்ததில்லை நான்
என்ன விந்தையிது
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
என் காதலும்,கவிதைகளும்
புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன
நாள்தோறும்,
நான் படித்து வரும்
மந்திரம் ஒன்று உரைக்கவா?
மாற்றம் உனக்கானதென்றால்
மாறியபடி இருப்பேன்
என் மரணம் வரை.!
முடிவு மிக மிக நேர்த்தி
ReplyDeleteநாள்தோறும்,
நான் படித்து வரும்
மந்திரம் ஒன்று உரைக்கவா?
மாற்றம் உனக்கானதென்றால்
மாறியபடி இருப்பேன்
என் மரணம் வரை.!
nandri vijai ..
Delete