மன்னிப்பாயா?
வரமாட்டேன் என்று தெரிந்தும்
கோவில் நடை சாத்தும் வரை
என்னை எதிர்பார்த்திருப்பாய்
எப்போதோ என் கூந்தலில்
இருந்து உதிர்ந்த ஒன்ரிரண்டு பூக்களை
இன்றும் பொக்கிசமாய் வைத்திருப்பாய்
என் பெயரினைத்
தெரிந்துகொள்ள எத்தனையோ
வழிகளில் முயன்று தோற்றிருப்பாய்
என் பெயர் தெரிந்த மறுகணம்
என்னை நொடிக்கு ஒருமுறை
உனக்குளே அழைத்து ரசித்திருப்பாய்
என்னைப்பற்றி யாரேனும் கேட்டிருந்தால்
என்னைப்பற்றி எனக்கே தெரியாத
நிறைய விசயங்களை அளந்திருப்பாய்
என்னைக் காண முடியாத விடுமுறை
நாட்களில் உன்னில் உள்ள என்னை
கவிதையாய் தொடுத்து எழுதியிருப்பாய்
தேடவே முடிதாத கூட்டத்தில்
என்னைத் தொலைத்து விட்டு
பின் தேடித் தேடி ஓய்ந்திருப்பாய்
என்னிடம் பேசிச் சிரித்து
சண்டைகள் போட ஆயிரம்
காரணங்களை வைத்திருப்பாய்
அவ்வப்போது மாற்றிய என்
வீட்டின் முகவரிகளை கண்டுகொள்ள
அயராது மெனக்கெட்டிருப்பாய்..
நீ என்னை பார்த்த நாட்களை
நாட்குறிப்பிலும், நான் உன்னைப் பார்த்த
நாட்களை நெஞ்சிலும் பதித்திருப்பாய்..
நான் கோபமாய் பார்த்திடும்
தருணம் நீ வேகமாய் நடையிட்டு
சோகமாய் கிடந்திருப்பாய்…
தோழிகளுடன் உன்னைப்பற்றி
முனுமுனுத்ததை ஊகித்துக்கொண்டு
அங்கும் இங்கும் குதித்திருப்பாய்..
எனக்கு கஷ்டமே வைக்காமல்
உன் பெயரை உன் நண்பனைக்
கொண்டே சத்தமாய் கூப்பிடச்சொல்லியிருப்பாய்
வீட்டிலிருந்து அலுவலகம், பின்
அலுவலகமிருந்து வீடு வரை என்னை
அக்கறையாய் பாதுகாத்திருப்பாய்…
என் பெயர் கொண்ட உன் தோழியை
அடிக்கடி சம்பந்தமே இல்லாமல்
சண்டைக்கு இழுத்திருப்பாய்
பேசக் கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களை
வேண்டுமென்றே நழுவவிட்டு அன்றிரவு
தூக்கத்தில் மொத்தமாய் உளறியிருப்பாய்
எங்கோ திசையில் இருக்கும்
எனக்காக நான் வேண்டிடும்
கடவுளிடம் பல முறை வேண்டியிருப்பாய்
இப்படி நம் காலத்தில்
உன் எல்லா துன்பத்திற்கும்
காரணம் நானாக இருத்திருக்க
வாய்ப்புகள் அதிகம் என்பதால்
என்னை தண்டித்து
மன்னிப்பாயா?
naan rasitha varigal ,
ReplyDeleteஎன்னை தண்டித்து
மன்னிப்பாயா?
Nandri Tholi
Deleteரொம்ப அழகான கவிதை விஜய்..
ReplyDeleteNandri Pri
ReplyDelete